10 கிமீ தூரம் ஜாகிங்..! அசத்தும் முதல்வர் மம்தா..!

By Manikandan S R SFirst Published Oct 26, 2019, 10:49 AM IST
Highlights

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 10 கிலோமீட்டர் தூரம் ஜாகிங் சென்றுள்ளார்.
 

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் மம்தா பானர்ஜி. இவரது வயது 64. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் இருக்கும் டிரெட்மில்லில்  நடைப்பயிற்சியும் செய்து வருகிறார். தன்னை சந்திக்க வருபவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது குறித்து கூறுவார் என்று அவரை சந்தித்தவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே நேற்று சர்வதேச பருவநிலை மாறுபாடு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்காக முதல்வர் மம்தா மலைப்பாதையில் 10 கிலோமீட்டர் தூரம் ஜாகிங் செல்ல முடிவெடுத்தார். இதற்காக டார்ஜீலிங்கில் இருக்கும் மலையடிவார பகுதியான குர்சியானிலிருந்து மகாநதி வரை ஜாகிங் சென்றார்.

அங்கு வழிநெடுகிலும் திரண்டு நின்ற மக்களுக்கு பருவநிலை மாறுபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர் மீண்டும் அதே வழியில் திரும்பினார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நல்ல ஆரோக்கியமே முக்கியம். காலை உணவு போன்ற ஒரு நல்ல பழக்கம்" என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மீண்டு வா மகனே சுர்ஜித்..! தமிழகமே ஏங்குகிறது..!

click me!