PM Narendra Modi : நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி கிடைக்காது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி மேற்கண்டவாறு கூறினார்.
பிரதமர் பேசியது என்ன?
நலத்திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இனிவரும் காலங்களில், உறுதியுடன் பணிகளை முடிப்பார்கள் என்று நமது இளைஞர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் கூறினார். வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், அதை நாம் எந்த விலை கொடுத்தாவது மேம்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். நாட்டின் புதிய தலைமுறையினருக்கும் இந்த நேரம் சிறப்பானதாக இருக்கும் என்றார் அவர்.
நிலவுக்கு செல்வது மட்டுமல்ல நமது பணி
நம்மால் நிலவுக்கு செல்ல முடிந்துள்ளது, ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருக்கும் வரை, ஒவ்வொரு குடும்பமும் நல்ல வீடு பெறும்வரை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதாரம் கிடைக்கும் வரை, நம் செயல்பாடுகள் குறையாது என்றார் அவர். இன்று மாலை 4.30 மணியளவில் விமான நிலையத்தை அடைந்த பிரதமர் மோடி, பின்னர் 5 முதல் 6.30 மணி வரை சிந்தியா பள்ளியில் தனது நேரத்தை செலவிட்டார். அப்போது, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமரை வரவேற்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முந்தைய அரசுகள் வெளிநாடுகளில் இருந்து செயற்கைக்கோள்களை பெற்று வந்ததாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் விண்வெளித் துறையை தற்போது இளைஞர்களிடம் ஒப்படைத்துள்ளோம், அதன் பலனாக நமது இளைஞர்கள் பெரிய அளவில் யோசிக்க துவங்கியுள்ளனர். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் நிலை இப்பொது உள்ளது என்றார் அவர்.
இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள் யார் யார் தெரியுமா?