கல்யாண விருந்து.. என்னது நல்லி எலும்பு இல்லையா? கடுப்பில் நிறுத்தப்பட்ட கல்யாணம் - போலீஸ் வந்ததால் பரபரப்பு!

By Ansgar R  |  First Published Dec 26, 2023, 1:36 PM IST

Wedding Called Off : திருமணங்கள் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் ஒரு விஷயம் என்று கூறுவார்கள். ஆனால் சில வினோத காரணங்களுக்காக அவை நிறுத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டு தான் வருகின்றது.


அந்த வகையில் தெலுங்கானாவில் மணப்பெண் தரப்பினர் ஏற்பாடு செய்திருந்த அசைவ சாப்பாட்டு மெனுவில் எலும்பு மஜ்ஜை என்று அழைக்கப்படும் ஆட்டுக்கால் நல்லி வழங்கவில்லை என்று பிரச்சனை செய்து . இரு வீட்டார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருகட்டத்தில் கோபமடைந்த மணமகனின் குடும்பத்தினர் அந்த திருமணத்தை ரத்து செய்துள்ளனர். 

மணமகள் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர், மணமகன் ஜக்தியாலைச் சேர்ந்தவர். அவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் தான் மணமகளின் இல்லத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஒரே திருமணம் நடக்கும் முன்பே மணமகன் வீட்டார் கல்யாணத்தை நிறுத்தியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos

undefined

திருப்பதிக்கு ஜன.1 வரை டோக்கன் இல்லாத பக்தர்கள் வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு!

நிச்சயம் வீட்டில் எளிமையாக நடந்த நிலையில், மணமகளின் குடும்பத்தினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மணமகனின் உறவினர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் அனைவருக்கும் தடபுடலாக அசைவ உணவு வகைகளை ஏற்பாடு செய்துள்ளனர். நிச்சயம் நல்லபடியாக நடந்து முடிய, விஷேஷத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுள்ளது. 

அப்போது மணமகள் வீட்டார் ஏற்பாடு செய்த அசைவ உணவு மெனுவில் நல்லி எலும்புகள் சேர்க்கப்படவில்லை என்பது மணமகனின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதை சுட்டிக்காட்டி பேச இரு குடும்பத்தினர் இடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. இந்த நல்லி எலும்பு இல்லாததால் வந்த வாய்ச்சண்டை இறுதியில் கைகலப்பில் சென்று முடிந்துள்ளது. 

இரு வீட்டார் இடையே சண்டை பெரிதாவதை கண்ட சிலர் உடனடியாக போலீசாருக்கு புகார் அளிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகள் சண்டையைத் தீர்க்க மணமகனின் குடும்பத்தினரை சமாதானபடுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் இது தங்களுக்கு நேர்ந்த அவமானம் என்று கூறி சமாதானமாக போக மறுத்துள்ளனர். 

கேரளாவில் டெட்ரா பாக்கெட்டில் மதுபான விற்பனை அறிமுகம்!

இறுதியில் நல்லி எலும்பால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு கட்டத்தில் மணமகன் வீட்டார் அந்த திருமணத்தை ரத்து செய்துள்ளனர். சாப்பாட்டில் நல்லி எலும்பு இல்லாததால் ஏற்பட்ட பிரச்சனையால் திருமணமே நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!