We Set Your Sister On Fire : மத்திய பிரதேசத்தில், சகோதரர் ஒருவருக்கு அவரது சகோதரியை கொன்றுவிட்டதாக வந்த அழைப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது, மைத்துனி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிர்மலா என்ற அந்த பெண் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
என்ன நடந்தது?
இறந்த நிர்மலா என்ற அந்த பெண்ணின் கணவர் பிரகாஷ், ஆறு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. பிரகாஷின் மூத்த சகோதரர் சுரேஷ், தனது தம்பியை தற்கொலைக்கு தூண்டியதே அவரது மனைவி நிர்மலா தான் என்று தனது மைத்துனி மீது பல நாட்களாக குற்றம் சாட்டி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஐயோ என் பொண்ண வரதட்சணை கேட்டே கொன்னுட்டாங்களே.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்..!
கணவர் 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்ததால், நிர்மலா தனது இரண்டு குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இருப்பினும், இறந்த நிர்மலாவின் மைத்துனர் அந்த பெண் தொடர் வெறுப்பு கொண்டிருந்தார், அவர் தனது இளைய சகோதரனின் மரணத்திற்கு அவர் தான் காரணம் என்பதை அடிக்கடி கூறிவந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமையன்று, சுரேஷ் அந்தப் பெண்ணைத் தாக்கி வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். உடனே "உன் தங்கையை எரித்துவிட்டோம்" என்று நிர்மலாவின் சகோதரருக்கு போன் வந்துள்ளது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார், தனது சகோதிரியை அன்று தான் தனது வீட்டுக்கு கூட்டி வர அவர் நினைத்ததாகவும், ஆனால் அதற்குள் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். புகாரை அடுத்து போலீசார் இப்பொது சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.