பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான அமெரிக்கத் தூதரின் வருகை மற்றும் சந்திப்பு குறித்த எங்களது ஆட்சேபனைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான அமெரிக்கத் தூதரின் வருகை மற்றும் சந்திப்பு குறித்த எங்களது ஆட்சேபனைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் டொனால்ட் ப்ளோம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்று, ‘ஆசாத் ஜம்மு காஷ்மீர்’ என்று பொருள்படும் வகையில் ஏஜேகே என்று குறிப்பிட்டார். இது புது டெல்லிக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அந்த பகுதி 1947 இல் பாகிஸ்தானால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது.
இதையும் படிங்க: புதுவையில் ஊதிய பாக்கியை வழங்கக் கோரி ஒற்றை காலில் நின்று போராட்டம்
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான அமெரிக்கத் தூதரின் வருகை மற்றும் சந்திப்புக்கு எங்களது ஆட்சேபனைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 9 மாதங்களில் 6 இந்தியர்கள் பாகிஸ்தான் காவலில் இறந்துள்ளனர். அவர்களில் 5 பேர் மீனவர்கள். இந்த 6 பேரும் தண்டனையை முடித்திருந்தனர். அவர் நாட்டிற்கு திரும்புமாறு இந்தியா முறையிட்ட போதிலும் அவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ராகுல்ஜி! முதலில் 'காங்கிரஸ் ஜோடோ யாத்திரை' நடத்துங்கள்: உ.பி. பாஜக தலைவர் கிண்டல்
பாகிஸ்தானில் சிறையில் இருக்கும் இந்திய கைதிகளின் மரணம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்திய கைதிகளின் பாதுகாப்பு பிரச்சினை இஸ்லாமாபாத்தில் உள்ள எங்கள் உயரதிகாரிகளால் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது. இந்திய கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீருக்கான அமெரிக்க தூதரின் (POJK) சமீபத்திய வருகை மற்றும் சந்திப்புகள் குறித்து எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது. அதை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம். அனைத்து மனித உரிமைகளிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்றார்.