கத்தாரின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இரண்டு மாதங்கள் (60 நாட்கள்) அவகாசம் இருப்பதாகவும், அது குறித்து சட்ட வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
கத்தார் நீதிமன்றம் 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனையை குறைத்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முன்னாள் கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், நீதிமன்றத்தின் உத்தரவு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இருந்தாலும், இந்தியர்கள் அனைவருக்கும் இனி மரண தண்டனையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கத்தாரின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இரண்டு மாதங்கள் (60 நாட்கள்) அவகாசம் இருப்பதாகவும், அது குறித்து சட்ட வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
கடந்த மாதம், கத்தார் நீதிமன்றம் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனையைக் குறைத்தது பெரிய நிவாரணமாக இருந்தது. அந்நாட்டின் மற்றொரு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ததை அடுத்து மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
கடற்படை வீரர்களுக்கு கத்தாரின் முதன்மை நீதிமன்றம் அக்டோபர் 26 அன்று மரண தண்டனை விதித்தது. பின்னர் 3 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அல் தஹ்ரா என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தாரில் உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். ஆனால், கத்தார் தரப்பிலோ இந்தியா தரப்பிலோ அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
2024ல் அலப்பறை கிளப்பப் போகும் டாடாவின் நான்கு புதிய எலெக்ட்ரிக் கார்கள்!