அய்யோ சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா ? ஆள விடுங்க சாமி!   அலறும் பாகிஸ்தான் !!

 
Published : Feb 14, 2018, 12:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
அய்யோ சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா ? ஆள விடுங்க சாமி!   அலறும்  பாகிஸ்தான் !!

சுருக்கம்

we donot want to surgical strike told pakistan minister

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள தங்களது ராணுவ வீரர்கள் தயாராக இருப்பதாக  கொக்கரித்துள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற நடவடிக்கைளில் இந்தியா ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இமுகமது இயக்கத்தைச் சேர்ந்த தீரிவவாதிகள் என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன், இந்திய வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது, பாகிஸ்தான் தன்னுடைய தவறுக்கு விலைகொடுக்கும் என்று எச்சரித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடர்ந்து இந்திய எல்லைக்குள் புகுந்து வாலாட்டிக் கொண்ருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க, 2016 செப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது.

 

சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை எல்லைக் கோட்டைத் தாண்டி இந்த படை ஊடுருவிச் சென்று, 7 தீவிரவாத முகாமை அழித்தது. இதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு வேட்டை முடிந்துள்ளது. இது போன்ற அட்டாக்கை Surgical Strike என்று கூறுகிறார்கள். இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் இது போன்றதொரு நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி குர்ரம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா எந்தவொரு தவறான தாக்குதல் தொடுத்தாலும், பாகிஸ்தான் உரிய பதிலடியைத் தரும் என தெரிவித்துள்ளார்

நாட்டை காப்பதற்கு பாகிஸ்தான் படைகள் முழுமையான தயார் நிலையில் உள்ளன என்றும், இந்தியா வலுச்சண்டைக்கு வந்தால், தவறாக கணித்தால், தவறான தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பிக்கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தஒரு ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக இந்தியா, தங்கள் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளும் சதிதிட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் எல்லையைத் தாண்டி வந்து, சர்ஜிகல் ஸ்டிரைக்  போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார.

PREV
click me!

Recommended Stories

உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!
அநியாயம்! தட்டிக்கேட்ட பெண்ணை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பொசுக்கிய கொடூரர்கள்!