
மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்ற படத்திற்காக எடுக்கபட்ட மாணிக்ய மலரேயா பூவி என்ற பாடல் யூடியூபில் வெளியாகி உள்ளது. ஒமர் லுலு இயக்கத்தில் ஒரு அடார் லவ் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் இந்த பாடலைப் பாடியுள்ளார். இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவே வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது-
இந்த படத்தில் பிரியா சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அவரின் திறமையை கண்டு இந்த படத்தில் காட்சிகளை அதிகப்படுத்தி உள்ளார் இயக்குனர்.18 வயதாகும் பிரியாவுக்கு கேரளா திருச்சூர் சொந்த ஊராகும். இவர் மோகினியாட்ட கலைஞராவார்.
ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். 'ஒரு அடார் லவ்' படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் பிரியா வாரியாரியாரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை லட்சங்களை எட்டியுள்ளது.
இந்த நிலையில் பிரியா பிரகாஷ் வாரியாருக்கு எதிராக, ஐதராபாத்தில், இசுலாமிய அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளது. ஒரு அடர் லவ் படத்தில் வரும் மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த பாடலில், புனித நபராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம் பெற்றுள்ளது.
இந்த வரிகள்தான் இசுலாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த பாடலில் நடித்த பிரியா வாரியார், பாடலை எழுதியவர், இசையமைப்பாளர், பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.