
பஞ்சாப் மாநிலத்தில், மெக்கானிக்கல் விரிவுரையாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்க தொழில்நுட்பத்துறை அமைச்சர் சரண்ஜித் சிங் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுமத்து, 37 மெக்கானிக்கல் விரைவுரையாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
37 விரிவுரையாளர்களில், 2 விரைவுரையாளர்கள், தங்களை பாட்டியாலாவில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதில் ஒருவர், சிறப்பான மதிப்பெண்களையும், மற்றொருவர் அதிக அனுபவமும் கொண்டிருந்தார். இதனால், அந்த இருவரில் யாரை நியமிப்பது என்ற நிலைக்கு அமைச்சர் சரண்ஜித் சிங் தள்ளப்பட்டார்.
இதில் தீர்வு காண்பதற்கு டாஸ் போட்டு அதாங்க... பூவா, தலையா போட்டு பார்த்து, அந்த இருவரில் ஒருவரை பாட்டியாலா பாலிடெக்னிக் விரிவுரையாளராக அமைச்சர் நியமித்தார்.
சிலரது கேமராக்களில் பதிவான இந்த காட்சிகள், பஞ்சாப் தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுதது எதிர்கட்சிகள், அமைச்சர் சரண்ஜித் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
இது குறித்து சரண்ஜித் சிங் கூறும்போது, முந்தைய பாரதிய ஜனதா, சிரோமணி அகாலி தள கூட்டணி ஆட்சியில் பணி நியமனத்தில் லஞ்சம் தாண்டவம் ஆடியது. நான் அதை அழித்து உள்ளேன் என்று அதனை நியாயப்படுத்தி உள்ளார்.
மேலும், பஞ்சாப் காங். கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விரிவுரையாளர் பணியிட நியமனம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதே அமைச்சரின் எண்ணம். இதை ஊடகங்கள்தான் தேவையில்லாமல் சர்ச்சையாக்கிவி