
ரயில் பயணிகளின் வசதிக்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் படி, தற்போது ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேவையான படுக்கை விரிப்பு, தலையணை, பெட் சீட் கம்பளி உள்ளிட்ட அனைத்தையும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
அதாவது ஏசி அல்லாத பிற சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள், ரூ.650யை செலுத்தி படுக்கை விரிப்பை முன் பதிவு செய்துக் கொள்ளலாம். இதே போன்று, ரூ.450ஐ செலுத்தி பெட்ஷீட், தலையணை, மெத்தை விரிப்பு போன்றவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், ரயில்வேயின் www.irctc.co.in எனும் இணையதளத்தில், பயணிகள் உணவு பொருளையும் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், இதற்கு முன்னதாக ரயில் குறித்த அனைத்து விவரங்கள் அடங்கிய ஹிந்து ரயில் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒரே நேரத்தில் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வே நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.