மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு..

 
Published : Apr 24, 2017, 06:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு..

சுருக்கம்

24 CRPF personnel killed in Naxal attack in Chhattisgarh

சத்திஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 24 உயர்ந்துள்ளது.  

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக மத்திய ரிசர்வ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி ஆயுதங்களுடன் இருந்த மாவோயிஸ்ட் கமாண்டர் கட்மாவை கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று சுக்மா என்ற பகுதியில் முகாமிட்டிருந்த வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

300 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாக படுகாயமடைந்த வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மத்திய இணை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஓய்வுக்கு முன் 'சிக்ஸர்' அடிக்கும் நீதிபதிகள்.. தலைமை நீதிபதி சூர்ய காந்த் கவலை!
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கொடுத்த அடியை இந்தியா ஒருபோதும் மறக்காது..! பீலா விடும் ஷாபாஸ் ஷெரீப்