தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறாம் - சந்திரபாபு நாயுடு

By Manikanda PrabuFirst Published Jun 5, 2024, 11:55 AM IST
Highlights

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறாம் என ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Latest Videos

குறிப்பாக, பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவு அளித்தால் தான் பாஜகவால் மத்தியில் ஆட்சியமைக்க முடியும். ஒருவேளை இந்த கட்சிகளை இந்தியா கூட்டணி தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது.

இதனிடையே, இவர்களை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியும், தக்க வைத்துக் கொள்ள பாஜகவும் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறாம் என ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Lok sabha Election Results 2024 எந்த கட்சிக்கு எத்தனை இடங்களில் வெற்றி - முழு விவரம்!

டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, “ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை; தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற வைத்த வாக்காளர்களு நன்றி. வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்து விட்டு சென்றனர். மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.” என்றார்.

கூட்டணி குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். அரசியலில் கூட்டணி முக்கியம் அல்ல. மக்கள் நலன் மற்றும் தேச நலனே முக்கியம். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யக் தயாராக இருக்கிறேன்.” என்றார்.

“நான் அனுபவசாலி.  இந்த நாட்டில் பல அரசியல் மாற்றங்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன்.” எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

click me!