கர்நாடகாவில் கிடுகிடுவென நிறையும் கபினி அணை! டெல்டா பகுதியில் குருவை சாகுபடியை காப்பாற்றுமா தென்மேற்கு பருவழை?

Published : Jul 06, 2023, 04:01 PM ISTUpdated : Jul 06, 2023, 04:09 PM IST
கர்நாடகாவில் கிடுகிடுவென நிறையும் கபினி அணை! டெல்டா பகுதியில் குருவை சாகுபடியை காப்பாற்றுமா தென்மேற்கு பருவழை?

சுருக்கம்

தென்மேற்கு பருவமழையில் கர்நாடக அணைகள் நிரம்பினால்தான் உபரிநீர் தமிழகத்திற்குத் திறக்கப்படும் என்று சூழல் நிலவுகிறது. அதனை எதிர்பார்த்து தமிழக விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 10781 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 145 கனஅடியாகக் குறைந்துள்ளது.

கடந்த ஜூன் 8ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த மாத இறுதி வரை கேரளா மற்றும் கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு தீவிரமடையாமல் இருந்தது. கர்நாடகாவில் 11 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவே மழை பெய்துள்ளது.

ரூ.400 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல்! செந்தில் பாலாஜிக்கு ஆப்பு வைக்கும் அறப்போர் இயக்கம்

இதனால், 45 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளதாக கூறி, கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு அளிக்கவேண்டிய நீரை திறந்துவிடாமல் இருக்கிறது. தமிழகத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்துவிட்டதால் குறுவை சாகுபடி தப்புமா என்ற கவலை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இச்சூழலில் கர்நாடக விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தென்மேற்கு பருவமழை மூலமாகத்தான் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதன்படி கர்நாடகாவில் தலைக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி போன்ற காவிரி ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சில நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது.

இதனால், கர்நாடக மாநிலத்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. கேரளாவிலும் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கபிலா ஆற்றில் வெள்ளம்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கடன் வாங்கி பயிரிட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு! கர்நாடக விவசாயி காவல்துறையில் புகார்

மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை நீர்மட்டம் 2283.01 அடியாக உயர்ந்துள்ளது. விநாடிக்கு 10,780 கனஅடி நீர் அணைக்கு வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசு இன்னும் தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரைத் திறக்காததால் ஒகேனக்கலில் காவிரி ஆறும் நீர்வீழ்ச்சியும் வறட்சி அடைந்துள்ளன.

தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்கான மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 145 கனஅடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவமழையில் கர்நாடக அணைகள் நிரம்பினால்தான் உபரிநீர் தமிழகத்திற்குத் திறக்கப்படும் என்று சூழல் நிலவுகிறது. அதனை எதிர்பார்த்து தமிழக விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலைக் கழுவி மன்னிப்பு கோரிய ம.பி. முதல்வர்

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!