
இந்திய ராணுவத்தின் பொறுமையை பாகிஸ்தான் ராணுவம் சோதித்து பார்க்க கூடாது. அவ்வாறு எங்களை நிர்பந்தத்தில் , நாங்கள் மற்ற எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்க தயங்கமாட்டோம் என்று இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் 70-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள மேஜர் ஜெனரல் கரியப்பா மைதானத்தில் ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். அந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசியதாவது-
இந்திய ராணுவத்தினரின் பொறுமையை பாகிஸ்தான் ராணுவத்தினர் சோதிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் எல்லைப்பகுதியில் ஊடுறுவ தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தால் அந்த கடுமையான சூழலைசமாளி்க்க இந்திய ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கும். அவ்வாறு பாகிஸ்தான் ராணுவம் நிர்பந்திக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.
தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் நுழைய பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது, ஆத்திரமூட்டும் செயலை பாகிஸ்தான் ராணுவம் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றி பெறாது. வடக்கு எல்லைப்பகுதியில்(சீன எல்லைப்பகுதி) தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது, விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்டத்துக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கின்றன. அதை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
சமூக ஊடகங்கள் மூலம் ராணுவத்துக்கு எதிரான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது, அதனால்தான் அதை நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.