
Waqf Bill sets a new record as the longest debate in Parliament : நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நடைபெற்ற நீண்ட விவாதத்திற்கு பிறகு வக்ஃபு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வக்ஃபு திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலமாக இந்த மசோதா சட்டமாகியிருக்கிறது. எனினும் இந்த திருத்த மசோதா எப்போது அமலுக்கு வரும் என்பது மத்திய அரசு பின்னர் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1981 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நீண்ட நேரம் நடந்த விவாதமாக இந்த வக்ஃபு மசோதா விவாதம் அரங்கேறியிருக்கிறது. கடந்த் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதம் நடந்து கடைசியாக 17 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விவாதம் நீடித்து புதிய சாதனையாக மாறியிருக்கிறது
வக்ஃபு திருத்த மசோதா சட்டமானது! குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!
முன் எப்போதும் இல்லாத வகையிலான விவாதமாக இந்த வக்ஃபு மசோதா திருத்த சட்டம் விவாதம் நாடாளுமன்றத்தில் அரங்கேறியிருக்கிறது. 17 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்து கடைசியில் 1981ல் நடந்த மிக நீண்ட விவாதம் என்ற சாதனையை இந்த வக்ஃபு மசோதா விவாதம் முறியடித்திருக்கிறது. இந்த சாதனையை நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னையில் தெருவுக்குத் தெரு AI கேமரா பொருத்தும் பணி தீவிரம்!
இது குறித்து கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் ஜே.எஸ். முருகன் ஆகியோருடன், வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதம், 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எஸ்மா (16 மணி நேரம் 55 நிமிடங்கள்) மீதான முந்தைய சாதனை நேர விவாதத்தை முறியடித்தது என்று குறிப்பிட்டுள்ளார். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிஜிஜூ கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற விவாதங்களில் இது புதிய சாதனை. இடையூறு இல்லாமல் நடந்த விவாதத்திற்கு கிடைத்த ஒரு சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விவாதம் மறுநாள் அதிகாலை 4.02 மணி வரையில் நீடித்துள்ளது. இதன் மூலமாக 17 மணிநேரம் நடைபெற்ற விவாதமாக இந்த வக்ஃபு மசோதா விவாதம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெற்றியில் சூரிய ஒளி.. அயோத்தி ராமர் சிலையில் இதை கவனிங்க!