வக்ஃப் திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல்.! எதிர்கட்சிகளின் திட்டம் என்ன.?

மத்திய அரசு வக்ஃப் வாரிய சொத்துக்கள் தொடர்பான திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.


Waqf act amendment : இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரில் வழங்கப்படுகிற சொத்துகளை நிர்வகிக்க கூடியது வக்ஃபு வாரியம். இந்த நிலையில் மத்திய அரசு வக்ஃபு வாரியம் சொத்துக்கள் தொடர்பாக திருத்தம் கொண்டு வந்து கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதிலும், நிர்வகிப்பதிலும் உள்ள சிக்கல்களை சரிசெய்யும் நோக்கில், 1995-ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தை திருத்துவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது . 500க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொடுத்திருந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் 14 திருத்தங்கள் மட்டும் கூட்டுக் குழுவில் ஏற்கப்பட்டன.

வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுங்க.! சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின்

Latest Videos

வக்ஃப் திருத்த மசோதா 

இதனையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராகும் வகையில் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால், வாக்கெடுப்பின் மூலம் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 8 மணி நேரம் விவாதம் நடைபெறும்,பாஜக மற்றும் காங்கிரஸைப் போலவே, அவர்களின் கூட்டணிக் கட்சிகளும் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தங்கள் எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் ஆஜராகுமாறு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

வக்ஃப் திருத்த மசோதா: 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல், எதிர்க்கட்சிகள் கண்டனம்!

வக்ஃப் திருத்த மசோதா - எதிர்கட்சிகள் எதிர்ப்பு

வக்ஃப் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி) ஏப்ரல் 2-ம் தேதி லோக்சபாவில் தங்கள் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகி வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா கூட்டணியின் தலைவர்கள் வக்ஃப் (திருத்த) மசோதா குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினர்.

இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்த இந்த திருத்த மசோதா முயல்கிறது. முந்தைய சட்டத்தின் குறைபாடுகளை சரிசெய்வதுடன், வக்ஃப் சட்டத்தை மறுபெயரிடுவது, வக்ஃப் வரையறைகளை புதுப்பிப்பது, பதிவு செயல்முறையை மேம்படுத்துவது மற்றும் வக்ஃப் பதிவுகளை நிர்வகிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரிப்பது போன்ற மாற்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வக்ஃப் வாரியங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

click me!