ஜார்க்கண்ட்டில் சரக்கு ரயில்கள் மோதி 2 லோகோ பைலட்டுகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
Two goods trains collided in Jharkhand: ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் ரயில்கள் மோதிய விபத்து நடந்துள்ளது. சாஹிப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் காவல் நிலையப் பகுதிக்கு அருகிலுள்ள ஃபரக்கா-லால்மதியா ரயில் பாதையில் இந்த விபத்து நடந்தது. முதற்கட்ட தகவலின்படி, காலியான சரக்கு ரயில் பர்ஹைட் எம்டியில் நிறுத்தப்பட்டிருந்தபோது, லால்மதியாவிலிருந்து சென்று கொண்டிருந்த நிலக்கரி ஏற்றப்பட்ட த்ரூ-பாஸ் சரக்கு ரயில் அதன் மீது பலமாக மோதியது.
சரக்கு ரயில்கள் மோதல்
அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் ஓட்டுநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த இரண்டு சரக்கு ரயில்களும் தண்டவாளங்களும் என்டிபிசிக்கு சொந்தமானவை, மேலும் அவை முக்கியமாக அதன் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன என்று போலீசார் தெரிவித்தனர். ''இரண்டு சரக்கு ரயில்களின் ஓட்டுநர்களும் நேருக்கு நேர் மோதியதில் கொல்லப்பட்டனர்" என்று சாஹேப்கஞ்ச் துணைப்பிரிவு காவல் அதிகாரி கிஷோர் டிர்கி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்தியன் ரயில்வேயிக்கு சொந்தமானது அல்ல
இந்த விபத்து தொடர்பாக கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கௌசிக் மித்ரா கூறுகையில், "சரக்கு ரயில்கள் மற்றும் தண்டவாளம் இரண்டும் என்டிபிசிக்கு சொந்தமானது. இதற்கும் இந்திய ரயில்வேக்கும் எந்த தொடர்பும் இல்லை." விபத்து நடந்த பாதை பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள என்டிபிசியின் கஹல்கான் சூப்பர் அனல் மின் நிலையத்தையும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா மின் நிலையத்தையும் இணைக்கிறது'' என்றார்.
பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து! ஒருவர் பலி! 8 பேர் காயம்!
விசாரணை தீவிரம்
இந்த விபத்தில் குறைந்தது ஐந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஒரு சிஆர்பிஎஃப் வீரரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தற்போது பர்ஹைட்டில் உள்ள சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையை மதிப்பிடவும் விசாரணையைத் தொடங்கவும் மாவட்ட நிர்வாகம் ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
அடுத்தடுத்து ரயில் விபத்துகள்
இந்தியாவில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த 2வது ரயில் விபத்து இதுவாகும். நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பெங்களூரு-காமக்யா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
காஷ்மீருக்குச் செல்லும் முதல் வந்தே பாரத் ரயில்! பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!