
இந்திய வங்கிகளிடம் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா. இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர் நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியா வி.ஐ.பி.வரிசையில் அமர்ந்து கண்டுகளித்தார்.
இந்நிலையில் நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போட்டி பார்க்க விஜய் மல்லையாவும் வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் விஐபி கேலரியில் அமர்ந்து விஜய் மல்லையா அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்துள்ளதுள்ளார்.
சுமார் ரூ.9000 கோடிக்கு மேல் கடனை வாங்கிக்கொண்டு திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய இவரை, இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரோ ஹாயாக கிரிக்கெட் போட்டியை வி.ஐ.பி கண்டுகளித்த இந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.