செல்போன் சிக்னல் கிடைக்காததால் மரத்தில் ஏறி பேசிய மத்திய அமைச்சர்… அதிர்ச்சி தகவல்…

 
Published : Jun 05, 2017, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
செல்போன் சிக்னல் கிடைக்காததால் மரத்தில் ஏறி பேசிய மத்திய அமைச்சர்… அதிர்ச்சி தகவல்…

சுருக்கம்

No cellphone signal in rajastan...Minister claim the tree and speak

ராஜஸ்தான் மாநிலம் மேக்வால் தொகுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் செல்போன் சிக்னல் கிடைக்காததால், ஏணி மூலம் மரத்தில் ஏறி நின்று போனில் பேசிய அதிசய சம்பவம் நடத்துள்ளது.

மத்திய நிதித்துறை இணை மந்திரியாக உள்ள அர்ஜுன்ராம் மேக்வால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான பிக்கானீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்குள்ள  ஒரு சிற்றூருக்கு சென்ற அவர் அவசரமான செல் போனில் பேச முயற்சித்துள்ளார். ஆனால் அமைச்சருக்கு  செல்போனில் தொடர்பு சரிவரக் கிடைக்க வில்லை.

இதையடுத்த அங்குள்ள மரம் ஒன்றில் ஏணியை சாய்த்து வைத்து அதில் ஏறி நின்று போன் பேசி உள்ளார். மரத்தின் மீது ஏறி அவர் போன் பேசுவதை கண்டு அவரை சுற்றி இருந்த மக்கள் வேடிக்கையுடன் பார்த்தனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருக்கும் போது மத்திய அமைச்சர் ஒருவரே மரத்தின் மீது ஏறி நின்று செல் போனில் பேசியிருப்பது பெரும் சர்த்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இது போன்ற குக்கிராமங்களில் தகவல் தொடர்பு வசதிகள் இந்த அளவுக்குதான் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!