இந்திராவின் மறு உருவமே வருக... பிரியங்கா அரசியல் பிரவேசத்தை வரவேற்ற பரம எதிரி!

By Asianet TamilFirst Published Jan 24, 2019, 12:17 PM IST
Highlights

பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை மோடியை எதிர்த்து குரல் கொடுத்து வரும் சிவசேனா கட்சி வரவேற்றுள்ளது. பிரியங்காவை, இந்திரா காந்தியின் மறு உருவமாக மக்கள் பார்ப்பார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை மோடியை எதிர்த்து குரல் கொடுத்து வரும் சிவசேனா கட்சி வரவேற்றுள்ளது. பிரியங்காவை, இந்திரா காந்தியின் மறு உருவமாக மக்கள் பார்ப்பார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

பிரியங்கா உ.பி. மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரியங்காவின் வருகைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் காங்கிரஸின் பரம் எதிரியான சிவசேனா கட்சி, பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றுள்ளது. 

அந்தக் கட்சி ஒரு படி மேல் சென்று, ‘இந்திராவின் மறு உருவமாக பிரியங்காவை மக்கள் பார்ப்பார்கள்” என்று வர்த்துணித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷா காயண்டே கூறுகையில், “பிரியங்கா நேரடி அரசியலில் ஈடுபடுவது காங்கிரஸ் கட்சிக்கு பலன் அளிக்கும். இந்திரா காந்தியின் நற்பண்புகள் பிரியங்காவிடம் உள்ளன. மக்கள் ஓட்டு போட செல்லும்போது இந்திரா காந்தியின் மறு உருவமாக பிரியங்காவை நினைத்து ஓட்டு போடுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். 

பிரியங்கா அரசியல் பிரவேசத்தை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் வரவேற்றுள்ளன. மாறாக, மகாராஷ்டிராவில் இன்றுவரை பாஜக கூட்டணி அரசை ஆதரித்துவரும் சிவசேனா, பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!