சபரிமலை சென்ற கனகதுர்காவிற்கு நேர்ந்த சோகம்..!

Published : Jan 23, 2019, 03:46 PM ISTUpdated : Jan 23, 2019, 03:47 PM IST
சபரிமலை சென்ற கனகதுர்காவிற்கு நேர்ந்த சோகம்..!

சுருக்கம்

கோடிக்கணக்கான பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி சபரி மலைக்கு சென்றே தீருவேன் என கனக துர்கா பிடிவாதமாக சென்று வந்தார்.

சபரிமலை சென்ற கனகதுர்காவிற்கு கடைசியில் நேர்ந்த சோகம்..! 

கோடிக்கணக்கான பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி சபரி மலைக்கு சென்றே தீருவேன் என கனக துர்கா பிடிவாதமாக சென்று வந்தார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இருந்த போதிலும் காவலர்களின் பாதுகாப்போடு வீடு திரும்பிய கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கி காயம் அடைந்ததில் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, 24 மணி நேரமும் கனக துர்காவிற்கு பாதுகாப்பு வழங்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் மாமியார் வீட்டில் தான் சேர்க்கவில்லை என்றால், தனது சொந்த சகோதரர் கூட, கனக துர்காவை வீட்டில் சேர்க்கவில்லையாம்.

வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் வரை வீட்டில் இடம் கிடையாது என திட்டவட்டமாக சொல்லி விடவே, வேறு வழியில்லாமல் கனக துர்காவை அவரது மாமியார் வீட்டிலிருந்து அழைத்து சென்று பெருந்தலைமன்னாவில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் தங்க வைத்துள்ளனர் போலீசார். கனகதுர்காவிற்கு நேர்ந்த இந்த நிலையை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

PREV
click me!

Recommended Stories

மாப்ள.. நான் வந்துட்டேன்! 12,800 கி.மீ. தாண்டி வந்து நண்பனை மிரள விட்ட NRI இளைஞர்!
வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!