VK Pandian: “தலைவனைக் காக்கும் முன்கள வீரன்போல என்னை நான் கருதுகிறேன் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
“தலைவனைக் காக்கும் முன்கள வீரன்போல என்னை நான் கருதுகிறேன் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார். நவீன் பட்நாயக் மீதான தாக்குதல்களைத் தாங்கிக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்தப் பேசினார். நவீன் பட்நாயக்கின் நெருங்கிய ஆதரவாளராக உள்ள மாநில வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத் தலைவர் வி.கே.பாண்டியனையும் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த வி.கே.பாண்டியன் பாஜக மற்றும் மோடியின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். “கடந்த 10 ஆண்டுகளாகவே, பாஜகவினர் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தலைவரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ய முடியாத நிலையில், உடல்நிலை குறித்து பேசுகின்றனர்” என வி.கே.பாண்டியன் கூறினார்.
டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிக்கும் பழக்கம் இருமடங்குக்கு மேல் உயர்வு! என்ன காரணம்?
"நவீன் பட்நாயக்கின் செயல்பாடுகள், வெளிப்படைத்தன்மை, கடின உழைப்பு, மேலாண்மைத் திறன், நிர்வாகத்திறன் என எதைப்பற்றியும் விமர்சிக்க முடியாத நிலையில், இதுபோன்ற வதந்திகளை ஒரு முக்கிய கருத்தாக எடுத்து, பரப்பி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசியலுக்காகத் தரம்தாழ்ந்து பேசிவருவது அதிர்ச்சியாக இருக்கிறது.” என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த மாற்றம் பற்றிக் கேட்டதற்கு பதில் கூறிய அவர், “இது எனக்குப் பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறேன். என்னைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடைபெற்றாலும், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் நமது இலக்கில் தெளிவாக இருக்க வேண்டும். ஈகோ பார்க்க கூடாது. நான் முதல்வருக்கு உதவுவதற்காக வந்துள்ளேன்” என்றும் குறிப்பிட்டார்.
நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அதற்காக அயராமல் ஓடிக்கொண்டே இருப்பதாகவும் வி.கே. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வலம் வரும் ‘புஜ்ஜி’ கார்! பிரபாஸின் கல்கி படத்தில் பயன்படுத்திய எதிர்கால கார்!