சத்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என பாஜக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என பாஜக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ராய்பூரில் நடைபெற்ற பாஜகவின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 எம்எல்ஏக்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்தா சோனோவால், கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகிய மூன்று தேர்தல் பார்வையாளர்களும், சத்தீஸ்கர் கட்சியின் பொறுப்பாளர் ஓம் மாத்தூர், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மாநில இணைப் பொறுப்பாளர் நிதின் நபி ஆகியோரும் கூட்டத்தின்போது உடனிருந்தனர்.
59 வயதான விஷ்ணு தியோ சாய், சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் வடக்கு சத்தீஸ்கரின் குங்குரி தொகுதியில் வெற்றி பெற்றார். சாய் துர்க், ராய்பூர் மற்றும் பிலாஸ்பூர் பகுதிகளில் கணிசமான செல்வாக்கு கொண்ட சாஹு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு தியோ சாய்.
அண்மையில் முடிந்த தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 54 தொகுதிகளை பாஜக வென்றது. 2018ஆம் ஆண்டில் 68 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 35 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. கோண்ட்வானா காந்தந்த்ரா கட்சி (ஜிஜிபி) ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
சத்தீஸ்கரில் கட்சித் தலைவரான ராமன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யாவிட்டால், ஓபிசி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று ஊகிக்கப்பட்டது. இந்நிலையில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட அரசியல் அனுபவம் உள்ள விஷ்ணுதியோ சாய் சட்டமன்ற உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் வெற்றி பெற்றவர். 2014 முதல் 2019 வரை மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். கட்சியிலும் மாநிதத் தலைவர் உள்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
ம.பி.யில் நாய்க்குட்டியைக் தரையில் வீசி காலால் நசுக்கிக் கொன்ற நபர்!