மத ஊர்வலத்தில் வெடித்த பிரச்சனை.. எரிக்கப்படும் கார்கள் - பயத்தில் கோவிலுக்குள் தஞ்சம் புகுந்த 2500 பேர்!

By Ansgar R  |  First Published Jul 31, 2023, 7:46 PM IST

மத ஊர்வலத்தில் கலவரம் வெடித்த நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள கோயிலில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று சுமார் 2500 பேர் தங்கம் அடைந்துள்ளனர்.


கற்கள் வீசப்பட்டு, சாலையில் நிற்கும் கார்களுக்கு தீ வைக்கப்பட்டது அந்த இடமே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. உடனே அங்கு குவிக்கப்பட்ட போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தை அடக்க முயன்று வருகின்றனர். இந்த கலவரத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த கலவரத்தில் ஒருவர் குண்டடிபட்ட நிலையில் அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தை தொடர்ந்து அந்த பகுதியில் இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, மற்றும் பெரிய கூட்டங்களாக மக்கள் ஒன்று கூட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை மன்னிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

குருகிராமுக்கு அருகில் உள்ள நூஹ் என்ற இடத்தில் நடந்த மத ஊர்வலத்தின் போது தான் வன்முறை தொடங்கியுள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரையை, குருகிராம்-ஆல்வார் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தி, ஊர்வலத்தின் மீது கற்களை வீசியுள்ளனர். 

தற்போது, ​​மத ஊர்வலத்தில் பங்கேற்க வந்த, 2,500 பேர், நுல்ஹர் மகாதேவ் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களின் வாகனங்கள் வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் அவர்களை இதுவரை போலீசாரால் வெளியேற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. பஜ்ரங் தள ஆர்வலர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவால் தான் இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vande Bharat Express : 'காவி' நிறத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்! சுதந்திர தினத்தன்று தொடங்கி வைப்பு..!!

click me!