பாகிஸ்தானில் எந்த மத தலங்களையும் இந்தியா தாக்கவில்லை- விக்ரம் மிஸ்ரி

Published : May 08, 2025, 06:26 PM IST
பாகிஸ்தானில் எந்த மத தலங்களையும் இந்தியா தாக்கவில்லை- விக்ரம் மிஸ்ரி

சுருக்கம்

பாகிஸ்தான் எல்லை தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிக்ள இலக்கை தாக்கி அழித்தது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறுத. இது குறித்து இந்திய வெளியுறுவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற படத்தையும் மிஸ்ரி காட்டினார்.

பாகிஸ்தானின் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகளுக்கு இராணுவ மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் எந்த ஒரு மத வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்தியா குறித்து பொய்யான தகவலை பாகிஸ்தான் கூறி வருகிறது. பயங்கரவாதிகள் தொடர்பாக ஆதாரங்கள் கொடுத்தும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூஞ்ச் எல்லையில் சீக்கியர்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது.

பாகிஸ்தான் இனி தொடர்ந்து தாக்கினால் உரிய பதிலடி தரப்படும். பயங்கரவாதிகள் மட்டுமே இந்தியாவில் இலக்கு,  இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே மக்களை அல்ல என தெரிவித்தார்.  பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் இந்திய மக்கள் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் அணைகள் போன்ற கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!