விக்ரம் லேண்டர் பத்திரமாக இருக்கிறது...?? சூரிய வெப்பம் கிடைத்தால் செயல்பட வாய்ப்பு...!! அறிவியல் வல்லுனர்கள் லாஜிக் பாயிண்ட்...!!!

By Asianet TamilFirst Published Sep 7, 2019, 5:49 PM IST
Highlights

நாம் நினைப்பதுபோல வயர்லெஸ் கனெக்ஷன் ஆவது அவ்வளவு எளிதல்ல ,சாதாரணமாக நம் செல்லோனில் புளுடூத் கனெக்க்ஷன் ஆவதற்கே நேரம் எடுக்கிறதல்லவா, அப்படித்தான், கொஞ்சம் தூரத்திற்கே இப்படி என்றால், சுமார் 384000 கிலோ மீட்டருக்கு அப்பால்  உள்ள கிரகத்திற்கு சிக்னல் கனெக்ஷன் ஆவதற்கு சிறிது நேரம் ஆகும் 

மங்கல்யான் பத்து நாள் தொடர்பில்லாமல் இருந்து  பிறகே புகைப்படங்களை அனுப்பியது போல, விக்ரமும் சூரிய வெப்பம் கிடைத்து கனெக்ஷன் ஆக வாய்ப்புள்ளது என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்து கூறி வருகின்றனர். பூரண சூரிய ஒளி கிடைத்தால் மட்டுமே அது சாத்தியம் என கூறப்படுகிறது.

பூமியிலிருந்து நிலவுக்கு ஏவப்பட்ட சந்திராயன் 2 திட்டத்தின், விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க 2 கிலோமீட்டர் உயரமே இருந்த நிலையில் திடீரென அதன் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் என்ன ஆனது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேலை அது நிலவில் இறங்கியதா , அல்லது நிலவில் மோதி நொறுங்கிவிட்டதா, அப்படி இல்லை என்றால் அது என்னவாகி இருக்கும் என்ற குழம்பம் விஞ்ஞானிகளிடேயே நீடிக்கிறது. இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சித்துறை வல்லுனர்கள் பலர் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் மங்கல்யான் செயற்க்கைக்கோள் பத்து நாட்கள்வரை தொடர்பில் இல்லாமல் இருந்து பத்து நாட்களுக்குப்பிறகு புகைப்படங்களை அனுப்பியது போல விக்ரம் லேண்டரும் புகைப்படங்களை அனுப்ப வாய்ப்புள்ளது என்ற கருத்துக்களையும் கூறிவருகின்றனர்.

அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் என்ன வென்றால், விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியவுடன், சூரிய ஒளிஉதவியுடன் அதன் எரிப்பொருட்கள் இயங்க தொடங்கி லேண்டரின் பிளேட்டுகள் விரியும், அதிலிருந்து ரோவர் நிலவின் தரைப்பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு விளகிப்போய் நிலவை புகைப்படம் எடுக்கும் என்பதுதான் லேண்டரின் பணியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது லேண்டர் நிலவில் இறங்க வெறும் 2 கிலேமீட்டர் தூரம் இருந்தபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிலவு மிகவும் குளிரான கோள், பூமியுடன் ஒப்பிடும் போது நிலவில் 14 நாட்கள் இரவும் , 14 நாட்கள் பகலாகவும் இருக்கும் . நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 54 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர் நிலவும். ஒரு வேலை நிலவில் பத்திரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கி யிருந்தாலும் சூரிய ஒளி கிடைக்காமல் அது செயல்பட முடியாத நிலை இருக்கலாம், சூரிய வெப்பம் கிடைத்தவுடன் அது செயல்பட ஆரம்பிக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

நாம் நினைப்பதுபோல வயர்லெஸ் கனெக்ஷன் ஆவது அவ்வளவு எளிதல்ல ,சாதாரணமாக நம் செல்லோனில் புளுடூத் கனெக்க்ஷன் ஆவதற்கே நேரம் எடுக்கிறதல்லவா, அப்படித்தான், கொஞ்சம் தூரத்திற்கே இப்படி என்றால், சுமார் 384000 கிலோ மீட்டருக்கு அப்பால்  உள்ள கிரகத்திற்கு சிக்னல் கனெக்ஷன் ஆவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் விக்ரம் லேண்டர் தரையிரங்கும் கடைசி 10 நிமிடத்தில் அந்த இயந்திரம் இஸ்ரோ கிரவுண்டு கண்ட்ரோலால் கட்டுப்படாது அதுவாகவே இறங்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலவின் ஈர்ப்பு விசை பூமியைவிட ஐந்து மடங்கு அளவிற்கு குறைவு என்பதால்  லேண்டர் நிலவில் மோதி நெறுங்கவும் வாய்ப்பில்லை அது பத்திரமாக இருக்கவே வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 

click me!