கல்யாணமாகி கணவன் வீட்டுக்குப் போகும்போதே ... மணக்கோலத்தில் காருக்குள் பெண் செய்த சம்பவத்தால் பரபரப்பு..!

Published : Sep 07, 2019, 05:16 PM IST
கல்யாணமாகி கணவன் வீட்டுக்குப் போகும்போதே ... மணக்கோலத்தில் காருக்குள் பெண் செய்த சம்பவத்தால் பரபரப்பு..!

சுருக்கம்

இந்த வீடியோ தற்போது வைரல் ஹிட்டடித்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை பாராட்டி வருகிறார்கள்.  

திருமணமாகி பிறந்து வளர்ந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்களுக்கு அது ஒரு பெரிய சோகத்தை அளிக்கும். ஒரு மரத்தை வேரோடு எடுத்து வேறு ஒரு இடத்தில் நடுவதற்கு சமம் என்று கூறப்படுவது உண்டு.

தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், உற்றார் - உறவினர்கள் என சிறு வயதில் இருந்து பழகிய அனைத்தையும் விட்டுவிட்டு புதிதாக ஒரு இடத்திற்கு செல்வது என்பது பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் ஆகும். அதற்கு காரணம் புதிய சூழலுக்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக் கொள்ளப்போகிறோம் என்ற பயம் அவர்களை சூழ்ந்திருக்கும். ஆனால் இது போன்ற கவலைகள் எதுவும் இல்லாமல், எது நடந்தால் எனக்கென்ன நான் நானாகவே மகிழ்ச்சியாக இருப்பேன் என்று பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்க்க: -https://www.facebook.com/BanglarBoo/videos/2372013776169183/

மேற்குவங்கத்தைச் சேர்ந்த பெண், புகுந்த வீட்டுக்கு காரில் செல்லும் போது எடுத்த வீடியோவில் சோகம் மறந்து ஹேப்பியாக பாட்டுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஹிட்டடித்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை பாராட்டி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!