சூரிய ஒளிபடாத மர்மபகுதியில் இறங்கிய விக்ரம் லேண்டர்...!! உண்மை தெரிந்தால் பெருமை படுவீர்கள்...!!

By Asianet TamilFirst Published Sep 7, 2019, 3:41 PM IST
Highlights

2கோடியே ஒரு லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேலாக பயணித்து, வெறுமே 2.1 கிலோ மீட்டர் தொலைவு தூரத்தில், நிலவில் தரையிறங்கும் முன்பாகதான் #விக்ரம்-லேண்டர் செயலிழந்துள்ளது. பெரிய சாதனை. 

சிக்னல் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் எந்தமாதிரியான ஆபத்து நிறைந்த பகுதியில் பயணித்தது என்று தெரிந்தால் நாமே ஓரு கணம் நடுங்கிவிடுவோம். இதுவரை எந்த நாடுமே ஆராய பயந்த மர்மங்கள் நிறைந்த பகுதியில் நம் நாட்டு விக்ரம் இறங்கியதே நமக்கு பெருமைதான் என மூத்த பத்திரிக்கையாளர் ஏகலைவன் வியந்து புகழ்ந்துள்ளார். அது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் சில தகவல்கள்:- 

சந்திராயன்-2 வின் விக்ரம் லேண்டர்தான் செயலிழந்துள்ளது. அது மட்டுமே தோல்வி. அதுவும் வெற்றிகரமான தோல்வி.காரணம் விக்ரம் சென்ற பகுதி, பல லட்சம், கோடி ஆண்டுகள் சூரியனின் ஒளி படாத மர்மப்பகுதி. இதுவரை எந்த நாடும் அங்கே இறங்க- ஆய்வு செய்ய முயற்சிக்கவில்லை. அந்த வகையில் இந்தியா சாதித்துள்ளது.

 2கோடியே ஒரு லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேலாக பயணித்து, வெறுமே 2.1 கிலோ மீட்டர் தொலைவு தூரத்தில், நிலவில் தரையிறங்கும் முன்பாகதான் #விக்ரம்-லேண்டர் செயலிழந்துள்ளது. பெரிய சாதனை. அறிய முயற்சி. சற்று சறுக்கியுள்ளது. அவ்வளவுதான் மீண்டும் முயற்சித்து வெற்றியடையலாம். 

அதே நேரத்தில் சந்திராயன் 2 ஆர்பிட்டர், திட்டமிட்டபடி ஓராண்டுகளுக்கு நிலவை சுற்றியபடியே அதன் ஆய்வுகளை மேற்கொள்ளும். அறியவகை புகைப்படங்களையும் அனுப்பும். அதில் தோல்வி இல்லை. எனவே  இது தோல்வியல்ல.தொடருவோம். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

click me!