ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அதிருப்தி எம்.எல்.ஏ...!

By vinoth kumarFirst Published Sep 7, 2019, 12:12 PM IST
Highlights

ஆம் ஆத்மி கட்சிக்கு, குட்பை சொல்லிவிட்டு எம்.எல்.ஏ. அல்கா லம்பா இடைக்கால தலைவர் சோனிகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

ஆம் ஆத்மி கட்சிக்கு, குட்பை சொல்லிவிட்டு எம்.எல்.ஏ. அல்கா லம்பா இடைக்கால தலைவர் சோனிகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

 

டெல்லி சாந்தினி சவுக் தொகுதியின், ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ. அல்கா லம்பா(43). அந்த கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.  இந்நிலையில், கடந்த மக்களவை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், இந்த தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்' என, வலியுறுத்தினார். 

இதனையடுத்து, தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக கட்சியிலிருந்து விலகி இருந்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்,காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போதே, அல்கா லம்பா, காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.

 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு குட்பைசொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதால், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அதிருப்தி எம்எல்ஏ அல்கா லம்பா நேற்று தெரிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனிகாந்தி முன்னிலையில் அக்கட்சியில் அல்கா லம்பா இணைந்தார்.

click me!