லண்டனிலும் உல்லாச வாழ்க்கை வாழும் விஜய் மல்லையா !! என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

Published : Aug 14, 2018, 08:20 AM ISTUpdated : Sep 09, 2018, 07:13 PM IST
லண்டனிலும் உல்லாச வாழ்க்கை வாழும் விஜய் மல்லையா !!  என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

சுருக்கம்

லண்டனிலும் உல்லாச வாழ்க்கை வாழும் விஜய் மல்லையா !!  என்ன செய்திருக்கிறார் தெரியுமா? 

இந்தியாவைச் சேர்ந்த 28 பெரு முதலாளிகள், வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோடி அரசு கூறிவருகிறது.

இந்நிலையில், இந்திய வங்கிகளில் ரூ. 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு, லண்டனில் சொகுசாக சுற்றித்திரியும் - சாராய தொழிற்சாலை முதலாளி விஜய் மல்லையா, அங்குள்ள அவரது வீட்டில், தங்கத்தினாலான கக்கூஸ் கோப்பையைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ,மல்லையாவின் மேன்சனுக்கு சென்ற நிலையில் இதைப் பார்த்துள்ளார். தற்போது அவரே ‘தங்க கக்கூஸ்’ தகவலையும் வெளியிட்டுள்ளார்.

விஜய் மல்லையா, அவரது லண்டன்வீட்டில், பெண் தோழி பிங்கி லால்வானியுடன் தங்கியிருக்கிறார். 62 வயது விஜய் மல்லையாவும், பிங்கி லால்வானியும் கடந்த 3 ஆண்டுகளாக உறவுமுறையில் உள்ளதாகவும், விரைவில் மல்லையா பிங்கியை 3-ஆவது திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், அவரது மேன்சனில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
இந்தியாவுக்கு எதிராக சதி... ஒரே அடியில் பாடம் கற்றுக்கொடுக்கணும்..! யூனுஸ் அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள்..!