
ஹிஜாப் அணிந்து வந்த பெண் ஒருவர் ஜம்மு காஷ்மீர் மத்திய ரிசர்வ் காவல் படை அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பெண் வெடிகுண்டு வீசியோ பரபர காட்சிகள் அடங்கிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபூர் டவுனில் மத்திய ரிசர்வ் காவல் படை அலவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் வெளியில் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்த பெண் திடீரென தனது பையில் இருந்து எடுத்த வெடிகுண்டை மத்திய ரிசர்வ் காவல் படை அலுவலகத்தினுள் தூக்கி வீசி எறிந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் வீடியோவாக பதிவாகி இருக்கிறது.
சி.சி.டி.வி. வீடியோ:
சி.சி.டி.வி. கேமரா வீடியோவின் படி ஹிஜாப் அணிந்து வந்த பெண், சாலையின் நடுவே நின்று விடுகிறார். அடுத்து தான் எடுத்துக் கொண்டு வந்த பையில் இருந்து வெடிகுண்டை எடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படை அலுவலகத்தின் மீது வீசி எறிந்தார். பின் சம்பவ இடத்தில் இருந்து மிக வேகமாக வெளியேறி விட்டார்.
மர்ம பெண் தூக்கிய வீசி எறிந்த வெடிகுண்டு மத்திய ரிசர்வ் காவல் படை அலுவலகத்தின் வெளியே தான் விழுந்தது. அந்த வெடிகுண்டு வெடித்ததால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் அங்கிருந்த பொருட்களுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. வெடிகுண்டு தாக்குதலை அடுத்து அந்த பகுதியில் மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு விட்டது.
தேடுதல் வேட்டை:
தாக்குதல் நடத்திய பெண் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவரை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பெண் கைது செய்யப்பட்டுவார் என காஷ்மீர் காவல் பொது ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.
மத்திய ரிசர்வ் காவல் படை அலுவலகம் மீது பெண் ஒருவர் தனியே வந்து வெடிகுண்டு வீசு தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது போன்ற விவரங்கள் தாக்குதல் நடத்திய பெண் கைதான பின் தெரியவரும். பெண் தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.