74 வயது.. ஆங்கிலம் பேசி அசர வைக்கும் ஆட்டோ டிரைவர்.. முன்னாடி என்ன செஞ்சிட்டு இருந்தார் தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Mar 30, 2022, 10:57 AM IST
Highlights

இந்த தொழில் செய்வதால் தினமும் குறைந்தது ரூ. 700 முதல் அதிகபட்சமாக ரூ. 1500 வரை கிடைக்கிறது.

வாழ்க்கையில் யார் எதை வேண்டுமானாலும் செய்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதாற்கு வாழும் உதாரணமாகி இருக்கிறார் பெங்களூரை சேர்ந்த முன்னாள் ஆங்கில விரைவுரையாளர். 74 வயதான பட்டாபி ராமன் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். முன்னதாக இவர் ஆங்கில விரிவுரையாளராக மும்பையில் பணியாற்றி வந்துள்ளார். 

சாதி பாகுபாடு:

பின் அங்கிருந்து பெங்களூரு வந்த பட்டாபி ராமன், விரைவுரையாளர் பணியில் பல இடங்களில் முயற்சி செய்தார். எனினும், சாதி பாகுபாடு காரணமாக இவருக்கு பெங்களூரில் விரிவுரையாளர் பணி கிடைக்கவே இல்லை. இதை அடுக்கு மனமுடைந்த பட்டாபி ராமன் மீண்டும் மும்பைக்கே சென்று விட்டார். அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் மீண்டும் ஆங்கில விரைவுரையாளராக பணியில் சேர்ந்தார். 

20 ஆண்டுகள் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வந்த பட்டாபி ராமன் தனது 60-வது வயதில் விரைவுரையாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் மீண்டும் பெங்களூருக்கு குடிபெயர்ந்த பட்டாபி ராமன் தனது வாழ்க்கையை நடத்த ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். 

ஆட்டோ ஓட்டுனர்:

பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனரான பட்டாபி ராமன் சில நாட்களுக்கு முன் அலுவலகத்துக்கு விரைந்து கொண்டிருந்த நிகிதா ஐயர் என்ற பெண்மணியை சாலையில் சந்தித்தார். ஆங்கிலம் பேசி அவரை வரவேற்ற பட்டாபி ராமன், அந்த பெண் எங்கு போக வேண்டும் என்பதை ஆங்கிலத்தில் கேட்டு, கையில் இருக்கும் பணத்தை மட்டும் கொடுக்கும் படி வலியுறுத்தினார். இவரது வரவேற்பில் அசந்து போன நிகிதா ஐயர், ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு கொடுக்க முற்பட்டார்.

அப்போது தான், முன்னாள் ஆங்கில விரைவுரையாளரான பட்டாபி ராமன் எம்.ஏ. மற்றும் எம்.எட் வரை படித்திருக்கிறார் என்றும் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்றும் நிகிதா ஐயர் தெரிந்து கொண்டார். தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பலம் கிடைப்பதில்லை. அதிகபட்சம் அவர்களால் மாதம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரம் வரை மட்டுமே ஈட்ட முடியும். மேலும் தான் பணியாற்றி வந்தது தனியார் நிறுவனம் என்பதால் தனக்கு பென்ஷனும் கிடைக்காது என பட்டாபி ராமன் தெரிவித்தார்.

வருமானம்:

இதன் காரணமாக வீட்டில் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக ஆட்டோ ஓட்டுனராகி இருப்பதாக பட்டாபி ராமன் தெரிவித்தார். இந்த தொழில் செய்வதால் தினமும் குறைந்தது ரூ. 700 முதல் அதிகபட்சமாக ரூ. 1500 வரை கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு நானும்  எனது தோழியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார். பட்டாபி ராமன் தனது மனைவியை தோழி என்றே அழைப்பதாக கூறினார்.

"வாழ்க்கை துணையை ஒருவர் எப்போதும் தனக்கு இணையான மரியாதையை கொடுக்க வேண்டும். மனைவி என்று கூறும் போதே அவர் தன்னை விட தாழ்ந்தவர் என்று அர்த்தமாகி விடும். நான் ஒரு நாளைக்கு 9 முதல் 10 மணி நேரங்கள் வரை பணியாற்றி வருகிறேன். நாங்கள் கடுகொடி எனும் பகுதியில் வசித்து வருகிறோம்," என பட்டாபி ராமன் தெரிவித்தார்.

click me!