உ.பி.யில் ஸ்டேட் வங்கிக்குள் புகுந்து அலப்பறை செய்த காளை மாடு!

By SG Balan  |  First Published Jan 11, 2024, 6:51 PM IST

"அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவம் வங்கியில் குறைந்த அளவில் வாடிக்கையாளர் இருந்தபோது நடந்தது" என்று வங்கியின் தலைமை மேலாளர் கௌரவ் சிங் கூறியுள்ளார்.


உத்திரபிரதேச மாநிலம் உனாவ் பகுதியில் உள்ள ஷாகஞ்ச் என்ற இடத்தில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், புதன்கிழமை வழி தவறி வந்த காளை ஒன்று புகுந்துவிட்டது. இதனால், வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவத்தின் 30 வினாடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த காளை மாடு வங்கிக்குள் அசால்ட்டாக சுற்றித் திரிவதை வீடியோவில் காணலாம். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

வீடியோவில் காளை வங்கிக்குள் நுழைந்து ஒரு மூலையில் நிற்பதைக் காணலாம். பின்னர் கவுண்டரைக் கடந்து செல்கிறது. எதிர்பாராமல் சட்டென்று நுழைந்த மாட்டைப் பார்த்து வாடிக்கையாளர்களும் வங்கி ஊழியர்களும் மிரண்டு போய் ஒரு மூலையில் ஒதுங்கி நிற்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வட மாநிலங்களிலும் அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதி

SBI bank to bull: Abhi Lunch Time Hai 😋pic.twitter.com/m6vtYgnyJP

— Kumar Manish (@kumarmanish9)

அதே நேரத்தில் வங்கியின் பாதுகாவலர் மக்களை பின்வாங்கச் சொல்லிவிட்டு, மாட்டை ஒரு குச்சியால் விரட்ட முயற்சி செய்கிறார். அந்த மாடு வங்கி வளாகத்திற்கு வெளியே மற்றொரு காளையுடன் சண்டை போட்டுவிட்டு வங்கிக்கு உள்ளே வந்ததாகக் கூறப்படுகிறது.

"அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவம் வங்கியில் குறைந்த அளவில் வாடிக்கையாளர் இருந்தபோது நடந்தது" என்று வங்கியின் தலைமை மேலாளர் கௌரவ் சிங் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள துணிக்கடைக்குள் பசு ஒன்று சுதந்திரமாக நடமாடியது. அதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றது.

எக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்! இஸ்ரோவின் அடுத்த சாதனை!

click me!