
ஜக்தீப் தன்கர் 2022 ஆகஸ்ட் 7-ல் இந்தியாவின் 14-வது துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2027 வரை ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக உடல்நிலை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடித்தத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
அதாவது செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி 21 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25ம் தேதி. தேவைப்பட்டால் செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணி முதல் 5 வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை
தற்போது 2025 தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. பாஜக தலைமையிலான NDA கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி ஆகியவை தங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தலாம் என கூறப்படுகிறது.