துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Published : Mar 09, 2025, 10:37 AM ISTUpdated : Mar 10, 2025, 10:48 AM IST
துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

சுருக்கம்

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

துணைக் குடிரயசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

73 வயதான ஜக்தீப் தன்கருக்கு ஞாயிறு காலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங்கின் கீழ், ஜக்தீப் தன்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு! இந்திய ரயில்வேயில் புதிய விதி!

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!