
இந்திய ஜனாதிபதி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீராக குமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஜூலை 5ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அல்லது சுவராஜ் சுஷ்மா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், உறுதியான முடிவு எடுக்கவில்லை.
இதையடுத்து, பல்வேறு கட்சியினர், தலித் வேட்ளாரை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியதன்பேரில், ராம்நாத் கோவிந்த், மீரா குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், துணை ஜனாதிபதியாக உள்ள அமீத் அன்சாரியின் பதவி காலமும் முடிவடைகிறது. இதனால், அடுத்த துணை ஜனாதிபதியாக வெங்கய்யா நாயுடுவை தேர்வு செய்ய பாஜக தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு வெங்கய்யா நாயுடு, தனக்கு துணை ஜனாதிபதி பதவி வேண்டாம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறுகையில், மக்களை நேரில் சந்தித்து அவர்களில் ஒருவராக சேவை செய்வதற்கே விரும்புகிறேன். எந்தவிதமான சம்பிரதாய பதவியையும் ஏற்றுக்கொண்டு, மக்களிடம் இருந்து விலகி இருக்க விரும்பவில்லை.
வரையறைகள் இன்றி மனதில் தோன்றியதை பேசிக்கொண்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களுடன் உணவு உண்பதையே விரும்புகிறேன் என்றார்.