இப்படி கூச்சநாச்சமில்லாம நடக்குதே? இதுக்கு முடிவே இல்லையா? வெறிகொண்டு எழுந்த ஓசி சோறு புகழ் வீரமணி...

By sathish kFirst Published Aug 1, 2019, 2:35 PM IST
Highlights

IIT - யில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப்  புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வரிகளைக் கொண்ட வந்தே மாதரம் பாடலைப் பாடுவது - சட்ட விரோதமானது - கண்டனத்துக்கு உரியது இப்படியெல்லாம் செய்யலாமா? இது தப்பில்லையா? என்றும்  கி.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

IIT-யில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப்  புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வரிகளைக் கொண்ட வந்தே மாதரம் பாடலைப் பாடுவது - சட்ட விரோதமானது - கண்டனத்துக்கு உரியது இப்படியெல்லாம் செய்யலாமா? இது தப்பில்லையா? என்றும்  கி.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில் உள்ள IIT (Indian Institute of Technology) என்ற நிகர்நிலைக் கல்வி நிறுவனம் போன்ற ஒரு தனி அமைப்பு, ஜெர்மன் நாட்டு உதவி, மத்திய அரசு, மாநில அரசுகளின் நிதி உதவியாலும் பல்வேறு அனுமதிகளுடன் நடந்துவரும் நிறுவனம்!

நடைமுறையில் அது ஒரு தனி அக்கிர காரம்போலத்தான் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன் தலைமை, பேராசிரியர்கள் - தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான் மையோடு நடந்துவருவது யதார்த்த நிலை யாகும். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இயங்கிடக் கூடாது என்று முட்டுக்கட்டை போடப்படவில்லையா? ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏபிவிபி என்பதற்கே முழு ஆதரவு தந்து ஒரு சார்பு நிலையுடன் கூச்சநாச்சமின்றி நடைபெற்று வருகின்றது!

அங்கே மொழி வாழ்த்தாகிய (தமிழ்த்தாய் வணக்கப் பாட்டு) நீராரும் கடலுடுத்த' என்பதைப் பாடாமல், வந்தே மாதரம்' பாடி நிகழ்ச்சிகளைத் தொடங்குவது என்பது அண்மைக்காலமாக நடந்து வருகின்றது என்ற செய்தியும், நடைமுறையும் பெரிதும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு சார்பில் 1970-களிலேயே இதனைப் பாடித்தான் நிகழ்ச்சிகளைத் தொடங்கவேண்டும் என்ற சுற்றறிக்கை - ஆணை - வழங்கப்பட்டு எல்லா நிகழ்வுகளும், குறிப்பாக அரசு சார்பான கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் பாடுவது அவசியமானதாகும். இதனைப் புறக்கணிப்பது - தமிழைப் புறக் கணிப்பது மட்டுமல்ல; மாநில அரசின் ஆணையைப் பின்பற்றாத குற்றம் இழைத்த தாகவுமே கருதப்படும்.

வந்தே மாதரம் பாட்டு முழுமையாக சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை மிகக் கேவலப்படுத்தும் வரிகளைக் கொண் டது. 1938 இல் சி.இராஜகோபாலாச்சாரியார்  (இராஜாஜி) முதலமைச்சராக சென்னை மாகாணத்தில்  இருந்தபோது, சட்டசபை தொடங்குவதற்குமுன் ’வந்தே மாதரம்' பாட முடிவெடுத்தபோது, இஸ்லாமியர் உறுப்பினர்கள் ஆட்சேபித்து, எதிர்த்த காரணத்தால் அம்முறை நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெறும் பெரிய கல்வி நிறுவனத்தில் தமிழ் மொழி வாழ்த்துக்கு இடம் கிடையாதா? போராட்டம் வெடிப்பது உறுதி! உடனடியாக இந்த முடிவினை மாற்றிட, நீதித்துறைமூலம் தக்க பரிகாரம் தேடிட நாம் முயற்சிப்போம் என்பதையும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

click me!