சத்யராஜின் வருத்தத்தை வரவேற்கிறேன் - போராட்டத்தை வாபஸ் பெற்ற வாட்டாள் நாகராஜ்

 
Published : Apr 22, 2017, 12:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
சத்யராஜின் வருத்தத்தை வரவேற்கிறேன் - போராட்டத்தை வாபஸ் பெற்ற வாட்டாள் நாகராஜ்

சுருக்கம்

vattal nagaraj withdraw protest against sathyaraj

பாகுபலி 2 திரைப்படத்திற்கு எதிராக கன்னட சலுவாளி அமைப்பினர் மேற்கொண்டு வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதி நீர் விவகாரத்தில் நடிகர் சத்யராஜ் கர்நாடகவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் கன்னடர்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்த நடிகர் சத்யராஜூக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் நடித்த பாகுபலி 2 திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கர்நாடகவில் போராட்டம் வெடித்தது. 

கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்ததால் பாகுபலி 2 வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக சத்யராஜ் நேற்று தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் பாகுபாலி 2 படத்திற்கு எதிராக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்காலத்தில் நடிகர் சத்யராஜ் கவனமுடன் பேச வேண்டும் என்றும், சத்யராஜ் மன்னிப்பு கோரியதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!