டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் வாபஸ்?

First Published Apr 22, 2017, 11:15 AM IST
Highlights
delhi farmers protest withdrawal


டெல்லியில் போராட்டக்காரர்களை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தாள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 40 நாட்களாக தமிழக விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இதுவரை பிரதமர் மோடியோ, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ இதுவரை போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேரில் சந்திக்கவில்லை.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து உறுதி அளித்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

மேலும், தாங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் போல விவசாயிகளின் வங்கிக்கடன்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

click me!