
மத்திய பிரதேசத்தில் ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் வழக்கம்போல் பொதுமக்கள் அனைவரும் பொருட்கள் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் திடீரென தீ மளமளவென பரவியது.
இதில் அங்கிருந்த 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.