பெட்ரோல் டீசல் டோர் டெலிவரி! – இனி காத்திருக்க, வரிசையில் நிற்க தேவையில்லை

First Published Apr 21, 2017, 4:55 PM IST
Highlights
petrol diesel door delivery to homes


டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட இனிமேல் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். போன் மூலம் முன்பதிவு செய்தால், வீட்டுக்கே தேவையான பெட்ரோல், டீசலைக் வீட்டுக்கே கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியது இல்லை, நேரத்தையும் வீணாக்கவேண்டியது இல்லை. இந்த காத்திருப்பையும், வரிசையில் நிற்பதையும் தவிர்க்க முன்கூட்டியே செல்போன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டியது மட்டும்தான்.

இந்த திட்டம் குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “ உலகின் 3-வது மிகப்பெரிய பெட்ரோலியப் பொருட்கள் நுகரும் சந்தையை இந்தியா கொண்டுள்ளது. இங்கு மே 1-ந்தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைமாற்றம் முறை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

பெட்ரோல், டீசலை தங்கள் வாகனங்களுக்கு நிரப்ப நாள்தோறும் பெட்ரோல் நிலையங்களில் 3.50 கோடி மக்கள் காத்திருக்கிறார்கள். இவர்களின் பொன்னான நேரம் தினந்தோறும் வீணாகிறது.

இதைத் தடுக்க போன் மூலம் முன்பதிவு செய்தால், நுகர்வோர்களின் வீடுகளுக்கே பெட்ரோல் டீசல் கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த திட்டம் செயல்படுத்தும் போது, நுகர்வோர்கள் பெட்ரோல் நிலையங்களில் காத்திருக்கத் தேவையில்லை, நேரமும் மிச்சமாகும். ஆண்டுக்கு ரூ.2500 கோடி பெட்ரோல் நிலையங்கள் மூலம் கிடைக்கிறது. விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தார்.

click me!