மேகதாது அணை கட்ட ரஜினி, கமல் ரெண்டு பேரும் இதைச் செய்யணும்: வாட்டாள் நாகராஜ் பேட்டி

By SG Balan  |  First Published Mar 24, 2024, 7:35 PM IST

மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் பிரபல நடிகரான ரஜினிகாந்த் கமலஹாசன் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து பேசி மேகேதாது அணை கட்டுவதை எதிர்க்க வேண்டாம் என வலியுறுத்த வேண்டும் என வாட்டாள் நாடகராஜ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.


ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும் என கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைச் செய்யாவிட்டால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கர்நாடக மாநிலத்துக்குள் வரக்கூடாது என்றும் அவர்களின் திரைப்படங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Latest Videos

undefined

கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், "தமிழ்நாட்டில் உள்ள ஓசூர், தாளவாடி, நீலகிரி ஆகிய பகுதிகள் கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமானவை, இந்த பகுதிகளை கர்நாடக மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக நான் போராடி வருகிறேன், இதனை கர்நாடக மாநிலத்தில் சேர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தேர்தல் முடியும் வரை பாக்கெட்டில் பணமே இருக்கக் கூடாது! அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் போட்ட உத்தரவு!

"கர்நாடக மாநிலத்தில் வாழும் திரை துறையினர் மேகதாது அணை கட்ட ஆதரவாக போராட வேண்டும், மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை உடனே திரும்ப பெற வேண்டும். மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் அரசியல் செய்யக்கூடாது. இந்த விஷயத்தில் எங்களை எதிர்த்தால் எங்களது போராட்டம் தீவிரமடையும்" என்றும் அவர் கூறினார்.

"கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நிலையிலும்  கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை காவிரியில் திறந்து விட்டு வருகிறது. இது கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அரசு செய்யும் துரோகமாகும்" எனவும் கண்டனம் தெரிவித்தார்.

"மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் பிரபல நடிகரான ரஜினிகாந்த் கமலஹாசன் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து பேசி மேகேதாது அணை கட்டுவதை எதிர்க்க வேண்டாம் என வலியுறுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"தமிழக முதல்வரிடம் இதுகுறித்துப் பேசவில்லை என்றால் ரஜினிகாந்த்தும் கமலஹாசனும் கர்நாடக மாநிலத்திற்கு வர வேண்டாம். கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களை மீண்டும் தமிழகத்திற்கே அழைத்துக்கொள்ளுங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ச்சை... பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பேசுறது... வீடியோவை ரிபீட் செய்து விமர்சிக்கும் அண்ணாமலை

click me!