ராகுலால் பிரதமர் ஆகவே முடியாது... அடித்துச் சொல்கிறார் ராகுலின் பங்காளி!

Published : Apr 19, 2019, 08:18 AM IST
ராகுலால் பிரதமர் ஆகவே முடியாது... அடித்துச் சொல்கிறார் ராகுலின் பங்காளி!

சுருக்கம்

ராஜிவ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா மற்றும் ராகுல், பிரியங்கா ஆகியோரை விமர்சிப்பதை மேனகா தவிர்த்துவருவதாக கூறப்பட்டது. ஆனால், அவருடைய மகன் வருண் ராகுலைபகிரங்கமாக விமர்சித்துள்ளது அந்தக் குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியால் நிச்சயம் பிரதமர் ஆக முடியாது என்று ராகுலின்  தம்பியும் பாஜகவை சேர்ந்தவருமான வருண் காந்தி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா - மேனகா எப்போதுமே எதிர் துருவமாகவே இருப்பார்கள். மேனகா எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுப்பார். மேனகாவும் அவருடைய மகன் வருணும் பாஜகவில் இருந்துவருகிறார்கள். தற்போது உ.பி.யில் உள்ள பிலிபித் தொகுதியில் பாஜக வேட்பாளராக வருண் களமிறங்கியுள்ளார். 
உத்தரப்பிரதேசத்தில்  தனித்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி பிரியங்காவை பிரசாரத்தில் இறக்கியுள்ளது. இந்நிலையில்  காங்கிரஸ் தலைவரும் தன்னுடைய அண்ணனுமான ராகுல் பிரதமராக வர முடியுமா என்பது குறித்து தம்பி வருண் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில், “நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக ராகுல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தப் பதவிக்கு ராகுல் பொருத்தமில்லாதவர். இதை நான் ஒரு ஜோதிடனாகச் சொல்லவில்லை. உறுதியாகவே சொல்கிறேன். இன்னும் 10 முதல் 20 ஆண்டுகள் ஆனாலும்கூட ராகுலால் நிச்சயம் பிரதமராக முடியாது” என்று தெரிவித்தார்.
ராஜிவ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா மற்றும் ராகுல், பிரியங்கா ஆகியோரை விமர்சிப்பதை மேனகா தவிர்த்துவருவதாக கூறப்பட்டது. ஆனால், அவருடைய மகன் வருண் ராகுலைபகிரங்கமாக விமர்சித்துள்ளது அந்தக் குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?
ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!