’என் ஜாதியையே கேவலப்படுத்துகிறார் ராகுல்...’ மோடி ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Apr 17, 2019, 5:32 PM IST
Highlights

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் தன்னை கேலி செய்து வருகிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் தன்னை கேலி செய்து வருகிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது, "நான் ஒரு கேள்வி கேட்கிறேன். திருடர்கள் அனைவரின் பெயருக்குப் பின்னால் மோடி எனும் பெயர் இருக்கிறது. அது நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என யாராக இருக்கட்டும்.  இன்னும் எத்தனை மோடி வெளியே வரப்போகிறார்களா நமக்குத் தெரியாது" எனத் தெரிவித்திருந்தார். மேலும் ரஃபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மகராராஷ்டிராவில் உள்ள அக்லுச் என்ற ஊரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- வாரிசு அரசியல் உள்ளவர்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உள்ள எல்லா மோடிகளும் திருடர்கள் என்று சொல்கிறார்கள். 

என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு இனத்தையே களங்கப்படுத்துகிறார்கள். அவர்களது பேச்சு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம், சமூகத்தில் உள்ள அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைத் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். இப்போது அவர்கள் எல்லையை மீறி நடந்து கொள்கிறார்கள், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள் என மோடி ஆவேச பேசியுள்ளார்.

 

நான் காவலாளி என்றால் திருடன் என்கிறார்கள். உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளிதான். இதனால் அவர்களது கோ‌ஷம் என்னையும் தாண்டி என் சமுதாயத்தின் மீதும் பாய்ந்துள்ளது என்று கூறியுள்ளார். 

click me!