Modi vs Ajay Rai: வாரணாசியில் மோடிக்கு டஃப் கொடுக்கும் அஜய் ராய்! உ.பி.யில் கெத்து காட்டும் இந்தியா கூட்டணி!

By SG Balan  |  First Published Jun 4, 2024, 9:56 AM IST

உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 8 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. வாராணாசியில் பிரதமர் மோடி 5000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக கோலோச்சும் கோட்டையான உ.பி.யில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட நிலவரப்படி ஆளும் பாஜக கூட்டணிக்கு கடுமையான போட்டி இருப்பதைக் காணமுடிகிறது.

உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 48 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. வாராணாசியில் முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் மோடி 5000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்தார். பின்னர் 4வது சற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார்.

Latest Videos

undefined

வாரணாசி மக்களவைத் தொகுதி வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கான்ட், சேவாபுரி மற்றும் ரோஹனியா ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த நாடாளுமன்றத் தொகுதியில் ஆண்கள் 10,65,485, பெண்கள் 8,97,328, மூன்றாம் பாலினத்தவர் 135 என மொத்தம் 19,62,948 வாக்காளர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி இங்கு வாக்குப்பதிவு நடந்தது. 56.3% வாக்குகள் பதிவாகின.

Stock Market: தடாலடி சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச்சந்தையில் பிரதிபலிக்கும் தேர்தல் முடிவுகள்!

நரேந்திர மோடி 2019 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் 479,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், 63.62% வாக்குகளைப் பெற்று 674,664 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் 195,159 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் அஜய் ராய் 152,548 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அதற்கு முன் 2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை 371,784 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி தோற்கடித்தார். மோடி 581,022 வாக்குகளும், கெஜ்ரிவால் 209,238 வாக்குகளும் பெற்றனர்.

அமேதி தொகுதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி பின்னடைவைச் சந்தித்துள்ளார். ரே பரேலியில் ராகுல் காந்தி முன்னிலையில் இருக்கிறார். பாஜக கோலோச்சும் கோட்டையான உ.பி.யில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரப் பிரதேசம் கருதப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. சமாஜ்வாதி 5, காங்கிரஸ் 2 இடங்களில் வென்றன. பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலைப் புறக்கணித்திருந்தது. சமீபத்திய எக்ஸிட் போல் கணிப்புகளில் உ.பி.யில் பாஜக 70 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கூறப்பட்டது. ஆனால், கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் உ.பி.யில் பாஜகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டு காணப்படுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, அப்னா தளம், லோக் தளம் கூட்டணிக்கு எதிராக,காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்தன. பகுஜன் சமாஜ் தனித்துக் களம் கண்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: அடுத்த பிரதமர் யார்? தமிழகத்தில் மக்கள் தீர்ப்பு யாருக்கு சாதகம்?

click me!