Vande Bharat Express: 620கி.மீ, ரூ. 264 கோடி செலவு! மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் ரயில் பாதைக்கு வேலி

By Pothy RajFirst Published Dec 3, 2022, 2:20 PM IST
Highlights

மும்பை முதல் அகமதாபாத் வரை செல்லும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் அடிக்கடி கால்நடைகள் வருவைத் தடுக்கும் வகையில் 620 கி.மீ தொலைவுக்கு ரூ.264 கோடி செலவில் வேலி அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

மும்பை முதல் அகமதாபாத் வரை செல்லும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் அடிக்கடி கால்நடைகள் வருவைத் தடுக்கும் வகையில் 620 கி.மீ தொலைவுக்கு ரூ.264 கோடி செலவில் வேலி அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ரயில் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 4 முறை, ரயில் இருப்புப்பாதையின் குறுக்கை வந்த எருமை மாடுகள், பசுமாடுகள் மீது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்றாலும், ரயிலின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தன. அதிவேகத்துடன் செல்லும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் போது குறுக்கே வரும் மாடுகள் மீது மோதாமல் தவிர்ப்பதும் சிரமமாகும். 

மாடுகளை வளர்ப்போரும் ரயி்ல் இருப்புப்பாதை என்று கவனிக்காமல் மாடுகளை விட்டுவிடுவதால், இருப்புப்பாதை மீது நிற்கும் மாடுகள் மீது ரயில் மோது விடுகிறது. இருப்புப்பாதைக்கு குறுக்கை மாடுகளை விட்ட உரிமையாளர்கள் மீது ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மும்பை முதல் அகமதாபாத் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும்  620 கி.மீ தொலைவுக்கு ரூ.264 கோடியில் வேலி அமைக்கப்பட உள்ளது.

டெல்லி மதுபார் ஊழல் வழக்கு: தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ்

மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறுகையில் “ மும்பை முதல் அகமதாபாத் வரை 620 கி.மீ தொலைவுக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்செல்லும் பாதையில் வேலி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் இதற்கான செலவு ரூ.264 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்புபாதைக்கு குறுக்கே அடிக்கடி கால்நடைகள் வந்து,ரயில் மீது அடிப்பட்டு விபத்து நேர்கிறது. இதைத் தடுக்கும் வகையில் வேலி அமைக்கப்பட உள்ளது. 1.5 மீட்டர் உயரத்தில் ஸ்டீல் கம்பிகளால், டபிள்யு வடிவத்தில் கம்பிகள் மூலம் வேலை அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் வேலையின்மை 3 மாதங்களில் இல்லாத அளவு 8 சதவீதமாக நவம்பரில் அதிகரிப்பு:சிஎம்ஐஇ கணிப்பு

இந்த வேலி அமைத்தால் மனிதர்கள் வேலிக்குள் சென்று, வர முடியும். ஆனால், கால்நடைகள் வேலியைத் தாண்டி செல்ல முடியாது. ரயில்பாதைக்குள் கால்நடைகளை மேயவிடக்கூடாது என்பது குறித்து இருப்புப்பாதைக்கு அருகே இருக்கும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்”  எனத் தெரிவித்தார்

click me!