டெல்லி மதுபார் அனுமதிவழங்கியதில் நடந்தஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் டிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி மதுபார் அனுமதிவழங்கியதில் நடந்தஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் டிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் 6ம் தேதி விசாரணை நடத்தபப்டும்என கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிரிமனல் நடைமுறைச் சட்டம் 160பிரிவின்படி, விசாரணை நடத்துவதற்கு ஏதுவான இடம், எந்த இடத்தில் குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என தெரிவித்தால் 6ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸில் இருந்துவிலகிய 3 மாதத்தில் ஜெய்வீர் ஷெர்ஜில், அமரிந்தர் சிங்கிற்கு பாஜகவில் புதிய பதவி
டெல்லி மதுபார்களுக்கு லைசன்ஸ் வழங்கியதில் ஊழல் நடந்த வழக்கில் விஜய் நய்யார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் சவுத் குரூப் ரூ.100 கோடி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சவுத் குரூப்பில் சரத் ரெட்டி, டிஆர்எஸ் எம்எல்சி கவிதா, மகுந்த் ஸ்ரீனிவாசலுரெட்டி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இதையடுத்து, கவிதாவிடம் விசாரிக்க சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது
சிபிஐ நோட்டீஸ் குறித்து டிஆர்எஸ் எம்எல்சி கவிதா கூறுகையில் “ ஹைதராபாத்தில் உள்ள என்னுடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சந்திக்கலாம். சிஆர்பிசி 160பிரிவின் கீழ் சிபிஐ எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிபிஐ தரப்பில் நான் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். இது குறித்து அதிகாரிகளுக்கும் தெரிவித்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்
மாற்றத்துக்கு தயாராகிறதா பாஜக? தேசிய, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மிகப்பெரிய கூட்டம்
சிபிஐ தரப்பில் ஊழல்தடுப்பு டிஎஸ்பி அலோக் குமார் சாஹி, கவிதாவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் “ டெல்லி மதுபார் ஊழல் வழக்குத் தொடர்பாக சில உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த வழக்குத் தொடர்பாக உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை தெரிவிக்கலாம். டிசம்பர் 6ம் தேதி காலை 11 மணிக்கு இந்த வழக்கில் உங்களிடம் விசாரிக்க இருக்கிறோம். எங்கு உங்களைச் சந்திக்கலாம் என்பது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கவும்.” எனத் தெரிவித்தார்