காங்கிரஸில் இருந்துவிலகிய 3 மாதத்தில் ஜெய்வீர் ஷெர்ஜில், அமரிந்தர் சிங்கிற்கு பாஜகவில் புதிய பதவி

By Pothy RajFirst Published Dec 2, 2022, 4:58 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி 3 மாதங்களே ஆகிய ஜெய்வீர் ஷெர்கிலுக்கு தேசிய செய்தித்தொடர்பாளர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலமுன்னாள் முதல் அமரிந்தர் சிங், தேசிய செயற்குழுவில் இடம் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி 3 மாதங்களே ஆகிய ஜெய்வீர் ஷெர்கிலுக்கு தேசிய செய்தித்தொடர்பாளர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலமுன்னாள் முதல் அமரிந்தர் சிங், தேசிய செயற்குழுவில் இடம் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் அதிருப்தி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அந்தக்க ட்சியின் மூத்தத் தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறினார். அதில் ஜெய்வீர் ஷெல்கில் முக்கியமானவர்.
இது தவிர பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜக்கார்ஆகியோரும் முக்கியமானவர்கள். இவர்கள் காங்கிரஸில்இருந்து விலகி பாஜகவில் சமீபத்தில் சேர்ந்தனர்.

50 கி.மீ பேரணி!16 தொகுதிகள்: மெகாபேரணியில் பிரதமர் மோடி பிரச்சாரம்:10 லட்சம் பேர் திரண்டனர்

இவர்கள் 3 பேருக்கும் பாஜக புதிய பதவி வழங்கியுள்ளது. இதில் அமரிந்தர் சிங், சுனில் ஜக்கார் இருவரும் பாஜக தேசிய செயற்குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். ஜெய்வீர் ஷெர்கில் தேசிய செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தவிர உ.பி. அமைச்சர் ஸ்வதந்திர தேவ்சிங், உத்தரகாண்ட் பாஜக முன்னாள் தலைவர் மதன் கவுசிக், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராணா குருமீத் சிங், பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மனோரஞ்சன் கலியா ஆகியோரும் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளியேறிய ஜெய்வீர் ஷெர்கில் காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த 3ஆண்டுகளாக ராகுல், பிரியங்கா, சோனியா காந்தியை சந்திக்க முயன்றேன் அவர்கள் அனுமதியளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் நோக்கமும், முடிவு எடுக்கும் திறனும் ஒத்துப்போகவில்லை.

காங்கிரஸ் கரையான் போல் அரிக்ப்பட்டு வருகிறது என்று கடுமையாகச்சாடினார். காங்கிரஸ் கட்சியில் இளம் வளர்ந்து வரும் தலைவர்களில் ஜெய்வீர் ஷெர்கில் முக்கியமானவராக இருந்தார். இது தவிர மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகினார்கள். 

மும்பையில் திடீரென ஒரு மாதம் ஊரடங்கு: காரணம் என்ன? மும்பை போலீஸார் திடீர் உத்தரவு

அமரிந்தர் சிங் கடந்த 2021 நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். புதிய கட்சியைத் தொடங்கி பஞ்சாப் தேர்தலில் போட்டியி்ட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, பாஜகவில் சேர்ந்தார் அமரிந்தர் சிங். சுனில் ஜக்கார் கடந்த மே மாதம் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார்.

காங்கிரஸ் கட்சி தற்போது அமைப்புரீதியான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கபில் சிபல், ஜிதின் பிரசாதா, அஸ்வானி குமார், ஆர்பிஎன் சிங் போன்ற திறமையான தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளது பெரிய பின்னடைவாகும்.


 

click me!