நாடு முழுக்க பல்வேறு ரயில் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வேகமாகவும் செல்வதால் மக்களிடையே பெரும் வரவேற்பை இது பெற்றுள்ளது.
நாடு முழுக்க 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல்- பெங்களூரு- மைசூர் வந்தே பாரத் ரயிலும் அடங்கும். அதுமட்டுமில்லாமல், கோவை-சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 9ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மேலும், நாடு முழுக்க பல்வேறு ரயில் தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சில புனித யாத்திரை தலங்களை வந்தே பாரத் ரயில்கள் இணைக்கின்றன. அவை பின்வருமாறு,
1. புது டெல்லி-வாரணாசி
2. புது தில்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா,
3. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (மும்பை)-ஷிர்டி,
4. செகந்திராபாத்-திருப்பதி (புதிதாக திறக்கப்பட்டது)
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
தேசிய நெடுஞ்சாலை-744ன் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் மற்றும் கேரளாவின் சபரிமலை போன்ற தென்னகத்தில் உள்ள சில புனிதத் தலங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு இந்தத் திட்டம் சுமூகமான பயணத்தை உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட இணைப்பு யாத்ரீகர்களுக்குப் பயனளிக்கிறது மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு உதவுகிறது. வேலைகளை உருவாக்குகிறது, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவு சேவைகள் போன்ற துணைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!