
பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவனருமான பாபா ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் இந்து மடாதிபதிகள் மாநாடு நடைபெற்றது.
இதில் ராம்தேவ் பேசுகையில், இந்துமதம் மட்டுமே நல்லதை செய்கிறது. இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துகிறது. பெண்களை இஸ்லாமும் கிறிஸ்தவமும் கட்டாய மதமாற்றம் செய்கிறது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க..BJP Protest : திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?
கோவாவின் பனாஜியில் முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கலந்து கொண்ட பாராட்டு நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசியது வைரலாகி வருகிறது. அப்போது பேசிய அவர், பெருநிறுவனங்கள் 99 சதவீத நேரத்தை சுயநலத்திற்காக செலவிடுகின்றது.
அதானி, அம்பானி, டாடா, பிர்லா ஆகியோரை விட எனது நேரத்தின் மதிப்பு அதிகம். கார்ப்பரேட் நிறுவனங்கள் 99 சதவீத நேரத்தை சுயநலத்திற்காகச் செலவிடும்போது, துறவிகள் தங்கள் நேரத்தை பொது நலனுக்காகவும், மக்களுக்காகவும் செலவிடுகிறார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க..உச்சகட்ட கோபத்தில் சிறுபான்மையினர்.. ‘அங்க’ மட்டும் தயவு செஞ்சு போகாதீங்க! அண்ணாமலைக்கு தடை போட்ட அதிமுக